பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்து 1400 ரூபாவாகவும், 400 கிராம் சதோச பால் மா பக்கெட் ஒன்றின் விலை 910 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராம் 180 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 260 ரூபாவாகவும், பச்சரிசி ஒரு கிலோ கிராம் 200 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 258 ரூபாவாகவும் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வர்த்தகம், வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, வாடிக்கையாளர்கள் இன்று (19) முதல் அரசுக்கு சொந்தமான லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் இந்த பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கருத்துரையிடுக