சஜித் தான் அடுத்த ஜனாதிபதி!

 சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த மக்கள் ஆணை கிடைக்கும் என நாடளாவிய ரீதியில் மக்கள் பேசிக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிடுகின்றார்.



நாட்டின் மக்கள் ஆணை தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினர் அரசாங்கத்திற்கு செல்வார்கள் என அரசாங்கம் மேற்கொள்ளும் பொய்யான ஊடகப் பிரசாரங்களுக்கு மக்கள் ஏமாற வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தி மக்களை கேட்டுக்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அசல் உறுப்பினர்கள் எவரும் ஒருபோதும் அரசாங்கத்தில் இணையமாட்டார்கள் என அவர் நம்பிக்கையுடன் தொடர்ந்தும் தெரிவித்தார்.

ஹலவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0/Post a Comment/Comments