பாலஸ்தீன ஹமாஸ் போராளிகளை குறிவைத்து லெபனான் மற்றும் காஸா பகுதியில் பல இடங்களில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது.
லெபனான் மற்றும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களை ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது மற்றும் சர்வதேச அமைப்புகளின் நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெருசலமின் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா பள்ளியில் இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான ஜோர்டானியர்கள் அமான் வீதிகளில் இறங்கினர்.
பதாகைகளை ஏந்தியவாறு, ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்துரையிடுக