அக்குறணை நகரில் ஐந்து மாடிகளை கொண்ட சூப்பர் மார்கட் | பிரதேச சபையின் புதிய திட்டம்!

 அக்குறணை நகரில் ஐந்து மாடிகளை கொண்ட சூப்பர் மார்கட்! பிரதேச சபையின் புதிய திட்டம்! 

அக்குறணை நகரில் மினி மார்கட் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் நவீன வசதிகள் கொண்ட சுப்பர் மார்கட் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கை அக்குறணை பிரதேச சபையின் மேற்கொண்டு வருகின்றது.

இத்திட்டத்திற்கு அமைய அக்குறணை நகரின் மிக முக்கிய தேவையாக இருக்கின்ற வாகனத் தரிப்பிட வசதி (Large Vehicle Parking), சகல வசதிகளையும் கொண்ட கடைத் தொகுதிகள், கே.எப்.சீ. (KFC), மெக்டொனால்ட்ஸ் (McDonalds) போன்ற சர்வதேச தரம் வாய்ந்த உணவுச் சங்கிலிகள் (Food Chains), மாமிச உணவுகளுக்கான தனியான பகுதி, இன்டர்நெட் கஃபேக்கள், பிரெண்டட் ஆடை நிலையங்கள் (Branded Shops), நூலகம் (Library), மண்டபம் (Auditorium), அலுவலகங்கள் (Office Complex) மற்றும், நேர்த்தியான கழிப்பறை வசதிகள் போன்றன அதில் அமையப் பெறவுள்ளன.

இந்த மாபெரும் முன்னோடித் திட்டத்திற்கான கணக்கிடப்பட்டுள்ள உத்தேச செலவு 330 மில்லியன் ரூபாய்களாகும்.

அக்குறணை பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டம் தொடர்பிலான ஆலோசனைக் கூட்டம் அன்மையில் நடைபெற்றது. பிரதேச சபையின் கெளரவ உறுப்பினர்கள், கண்டி நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் திரு நிலந்த மற்றும் பல உத்தியோகத்தர்கள் அதில் கலந்து கொண்டனர்.

-ஊடக பிரிவு-









0/Post a Comment/Comments