நாளை தொழிற்சங்கப் போராட்டம் - முடங்குமா? பஸ் சேவைகள்

 நாளை (15) முன்னெடுக்கப்படவுள்ள தொழிற்சங்கப் போராட்டத்திற்கு தனியார் பஸ்கள் ஆதரவு வழங்காது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.



நாளைய தினம் போக்குவரத்துக்குக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது எனவும், பாடசாலைகள், அலுவலகங்கள் மற்றும் ஏனைய சேவைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.

மேலும் அந்த சேவைகளை இயக்க போதிய பஸ்கள் இல்லை என்றால் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மக்கள் சம்பளம் பெறுவதற்கு உரித்துடையவர்களாக இருந்தாலும், பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டால், தொழிலாளர்கள் பட்டினி கிடக்க நேரிடும், எனவே எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு வரை பஸ் சேவைகளை தடையின்றி முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்

0/Post a Comment/Comments