சர்வ கட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏம் ஹிஸ்புல்லாவுக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா ஐக்கிய முன்னணியின் தலைவர் சித்தீக் முஹம்மத் சதீக் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் நாட்டில் உள்ள நெருக்கடிகளை தீர்ப்பதற்கு அரபு நாடுகளில் இருந்து, இலங்கைக்கு பல கோடி ரூபாய் பெருமதியான உதவித் திட்டங்களை பெற்றுக் கொண்டுவரும் திறமை ஹிஸ்புல்லாஹ்வுக்கே உள்ளது.
முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லா அவர்கள் பல கோடிக்கணக்கான பணங்களை இலங்கைக்கு அரபு நாடுகளிடம் இருந்து உதவியாக பெற்று கிழக்கு மண்ணில் அணைத்து வளங்களையும் கொண்ட மிகவும் பிரமாண்டமான பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்.
மேலும் எதிர் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அல்லது முஸ்லிம் காங்கிரஸ் தங்களது தேசியப்பட்டியலை ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
-முகநூல் பிரதி-
கருத்துரையிடுக