நாடாளுமன்றத்துக்கு தீ வைக்கப்பட்டால் எம்மை சாடவேண்டாம்! - தன்னெழுச்சிப் போராட்டம் தொடரும்!

 எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியாகப் நாடீளுமன்றம் தெரிவு செய்துள்ள ரணில்விக்ரமசிங்கவை நாட்டின் ஜனாதிபதியாகத் தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என மக்கள் தன்னெழுச்சிப் போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.



அதன்படி ரணில் விக்கிரமசிங்வைத் துரத்தும் வரை தொடர்ச்சியாகப் போராடப் போவதாகவும், அடக்குமுறைகளை மீறி அப்போராட்டம் தொடரும் எனவும் காலிமுகத்திடல், ‘கோட்டா கோ கம’வில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தி போராட்டக்காரர்கள் இன்று (20) அறிவித்தனர்.

நேற்று 102 ஆவது நாளாகவும் காலிமுக்ததிடலில் மக்களின் தன்னெழுச்சிப்போராட்டம் தொடர்ந்த நிலையில் நாடாளுமன்றம் 8 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைத் தெரிவு செய்ததுடன் தன்னெழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள போராட்டக்காரர்கள் இணைந்து ஊடக சந்திப்பொன்றை நடத்தினர்.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தன்னெழுச்சிப் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரான வசந்த முதலிகே கூறியதாவது:

தற்போதைய நாடீளுமன்றம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை. இப்படியே மக்களாணையை மீறி செயற்பட்டால் நாடாளுமன்றத்தை மக்கள் தீவைத்து எரிக்கும் நிலையேற்படும்.

அவ்வாறு ஒரு சம்பவம் நடந்தால் அதனை எம்மீது சுமத்தி, எங்களைத்தேடி வரவேண்டாம் என அவர் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments