(இராஜதுரை ஹஷான்)
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். அரசியல் ஸ்திரமற்ற தன்மை தற்போதைய நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தும். எனவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளோம் என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கும்,பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (03) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும்,ஜனாதிபதி கோட்டபய ராஜபக்க்ஷவுக்கும் இடையிலான ஆளும் தரப்பு குழு கூட்டம் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது.
சமூக கட்டமைப்பில் தீவிரமடைந்துள்ள நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதை தவிர்த்து மாற்று திட்டங்கள் ஏதும் கிடையாது என பிரதமர்; ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ள நிலையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்துள்ளதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி சார்ட் நியூஸ்
கருத்துரையிடுக