அநுராதபுரம் மாவட்டம் பலலுவெவ காலகம் பலாத முஸ்லிம் விவாக பதிவாளராக நெல்லியகமையை சேர்ந்த எஸ். எம். எம் பாரீஸ் நியமனம்!
முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விவகாரங்களுக்கு பொறுப்பான பதிவாளர் நாயகம் பீ. எஸ். பீ அபேரத்னவினால் அன்மையில் நியமனம் வழங்கப்பட்டு அவர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
சமூக சேவை பணிகளில் ஈடுபாட்டாளரான இவர் நெல்லியகம ஜும்மா பள்ளிவாசல் தலைவராகவும், நெல்லியகம முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளராகவும் கடமையாற்றியதுடன் கெகிராவ பிரதேச கிரிக்கெட் கவுன்சில் அமைப்பின் தனாதிகாரியாகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது!
அவருடைய சில புகைப்படங்களை கீழே காணலாம்!
கருத்துரையிடுக