பெருமளவு மக்கள் ஒரே நேரத்தில் இணையத்தளத்தை அணுகினால் அது செயலிழக்கும் – எரிசக்தி அமைச்சர் எச்சரிக்கை!

 -சி.எல்.சிசில்-

எரிபொருள் பெற தேசிய அடையாள எண் மற்றும் வாகன இலக்கத்தை உள்ளிட்டு பதிவு செய்ய இன்று வெளியிடப்பட்ட இணையத்தளம் சில மணி நேரங்களில் செயலிழந்துள்ளது.

காரணம், குறுகிய காலத்துக்குள் அதிக எண்ணிக்கையிலான வருகைகளைப் பெற்றதாகும்.



இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்த எரிசக்தி அமைச்சர், பெருமளவிலான மக்கள் ஒரே நேரத்தில் இணையத்தளத்தை அணுகினால், அது முடக்கப்படலாம் என்று கூறினார்.

எனவே, பதற்றமடையாமல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முறையாகப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

0/Post a Comment/Comments