பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவாவுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன் போது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் எனவும் அதன் பின்னர் ஊழியர் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்ய முடியும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்டத்துக்கும் இடையிலான உடன்படிக்கையின் முடிவிலேயே நிதி உறவுப் பேச்சுக்கள் அமையும் என பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துரையிடுக