கட்டாரின் எரிசக்தி இராஜாங்க அமைச்சரை சந்தித்து, இலங்கைக்கான பெற்றோலிய விநியோகம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்நாட்டுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் தொடர்பில் கலந்துரையாட கட்டார் நோக்கி சென்றுள்ள அமைச்சர் ட்விட்டர் செய்தியில் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், கட்டார் எரிசக்தி தொடர்பான தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரியுடனும் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டார் எரிசக்தி மற்றும் கட்டார் மேம்பாட்டு நிதியத்தின் உதவியுடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கருத்துரையிடுக