தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கையளித்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமது தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதன் மூலம் பொதுஜன பெரமுன கட்சியினூடாக பொருத்தமான ஒருவரை பாராளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
கருத்துரையிடுக