காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரை சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் பொருட்களை கொண்டு செல்வதற்கான படகு சேவையையும் ஆரம்பிக்க முடியும் எனவும் கடற்றொழில் அமைச்சர் கூறினார்.
சரக்கு கப்பல் சேவையூடாக எரிபொருள், உரம், பால் மா, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு இயலும் என கடற்றொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
சரக்கு கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கு தேவையான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.
கருத்துரையிடுக