தேசிய அளவிலான நூலக போட்டியின் மூன்றாம் கட்டமான மாகாண மட்ட போட்டிகளில் போட்டியிடுவதற்கு அக்குறணையைச் சேர்ந்த 8 பேர் தேர்வு!
நூலக அபிவிருத்தி வேலைத் திட்டத்திற்கு அமைய பிராந்திய, மாவட்ட, மாகாண, தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கமைய அக்குறணை பிரதேச சபைக்கு உட்பட்ட நூலகங்களில் இருந்து இலக்கிய போட்டிகளுக்காக வேண்டி முதல் இரு சுற்றுகளில் வெற்றி பெற்று 8 பேர் மாகாணமட்ட மூன்றாம் கட்ட போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தேர்வாகி இருக்கின்றனர்.
அவ்வாறு மாகாண மட்டத்திலான மூன்றாம் கட்ட போட்டிகளில் போட்டியிட தேர்வான மாணவர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. குண்டசாலை SWRD பண்டாரநாயக்க பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட போட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், "ஒவ்வொரு பிள்ளைக்கும் பூரண ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உகந்த ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பதும் நிலையான கல்வி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதும் எம்மீது இருக்கின்ற ஒரு கடமையாக இருக்கின்றது." என்பதாக குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள் அக்குறணை பிரதேச சபையினூடாக கல்வி ரீதியாக பல மாற்றங்களை ஏற்படுத்த பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை பிராந்தியத்தில் முன்னெடுத்து வருவதாகவும், பாடசாலை கல்வி செயற்பாடுகள் மற்றும் அதற்கு அப்பாற்பட்டு கலை, இலக்கியம், மொழி, தொழில் நுட்ப துறைகளில் மாணவர்களை வலுவூட்டவும், ஊக்குவித்து முன்னேற்றவும் பல வேலைத்திட்டங்களில் அதிக கவனத்தை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கருத்துரையிடுக