ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தாதுகோபுரத்தின் கலசம் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) கலந்து கொண்டார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களினால் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் கலசம் திறந்து வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பிரதமர் புதிய தாதுகோபுரத்திற்கு முதலாவது மலர் பூஜை நடத்தினார்.
கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமஸ்ரீ சங்க சபையின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய இத்தேபானே தம்மாலங்கார மஹாநாயக்க தேரர், மல்வத்து விகாரை பீடத்தின் அனுநாயக்கர் நியங்கொட விஜிதசிறி அனுநாயக்க தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
கருத்துரையிடுக