13.01.2022
அநுராதபுரம் திறப்பனை பிரதேச சபையின் உப தலைவரும் அநுராதபுர மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன பொருளாலருமான பிரபல சமூக சேவையாளர்
சகோதரர் முஜிபுர் ரகுமான் இன்று(13) காலமான செய்தி அறிந்து முஸ்லிம் லீக் ஆழ்ந்த கவலை கொள்கிறது.
கெகிராவ மத்திய கல்லூரியில் கல்வி பயின்று, பேராதனை பல்கலைக்கழ பட்டதாரியாக வெளியாகி மாணவ இளைஞர் பருவத்திலிருந்து சமூக சேவை மற்றும் அரசியல் செயற்பாடுகளில் அதீத ஆர்வம் காட்டி,கட்சி அரசியலுக்குள் நுழைந்து ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு தொடர்ச்சியாக சிங்கள முஸ்லிம் வாக்குகளால் வெற்றி பெற்ற ஓர்
பிரதேச மட்ட அரசியல் தலைவராவார்.
இன ஐக்கியத்திற்கு வித்திட்டவர்.பாகுபாடற்ற சமூக சேவையால் பெரும்பான்மை இன மக்களின் நன்மதிப்பை பெற்ற அதே வேளை பிரதேச மட்டத்தில் அரசியல் விழிப்பியலை ஏற்ப்படுத்துவதில் கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்பட்ட துனிகர அரசியல் பிரமுகராவார்.
2019 ஆம் ஆண்டிலிருந்து அநுராதபுரம் மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளத்தில் ஆர்வத்துடன் இணைந்து கொண்டு அதன் பொருளாலாராகவும் செயற்பட்டார்.அநுராதாபுரம் மாவட்டத்தில் இயங்கும் பல்வேறு சமூக சேவைகள் அமைப்பில் அங்கத்தவராக செயற்பட்டவர்.
பிரதேச மட்ட அரசியலில் செல்வாக்கு மிக்க ஒரு ஓர் இளம் தலைவர்.இளம் துடிப்பான பக்குவமான ஓர் அரசியல் செயற்பாட்டாளர் என்றால் அது மிகையாகாது.நீதியின் பாலான பிரதேச மட்ட செல்வாக்கு அரசியலுக்கு முன்னுதாரணமானவர்.இவர் போன்றோரின் மறைவு அநுராதபுர வாழ் மூவின மக்களுக்கும் பேரிழப்பாகும்.
இவரின் இழப்பால் துயர் உரும் மனைவி,பிள்ளைகள் உட்பட உறவினர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய நல்லமல்கள் அங்கீகரிக்கப்பட்டு, பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மறுவுலக வாழ்வு சிரக்க இறைவன் அருள்புரிவானாக.
பனிப்பாளர்-வடமத்திய மாகாணம்,
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம்.
கருத்துரையிடுக