முன்னாள் மீன்பிடி ராஜாங்க அமைச்சர் திலிப் வெதாராச்சி பச்சை மீனை சாப்பிட்டு காட்டி மீன்களை உண்ணுமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் மீன்களை கொள்வனவு செய்வதே மீனவர்களுக்காக செய்யக் கூடிய பெரிய சேவையாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரண்டு மீன்களை பையில் எடுத்து வந்த அவர் பையில் இருந்து ஒரு மீனை எடுத்து பச்சையாக சாப்பிட்டு காட்டியுள்ளார். இவை புதிய மீன்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை அனுபவிப்பதாக கூறினார்.
மீன்களில் கொரோனா வைரஸ் இல்லை என்று கூறிய அவர் அதனை உறுதிப்படுத்தும்வகையில் செய்தியாளர்களின் முன்னிலையில் மீனை பச்சையாக சாப்பிட்டுக் காட்டினார்.
கருத்துரையிடுக