சகல தொழிற்சாலைகளிலும் சுகாதார குழுவொன்றை அமைக்க, தொழில் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலையடுத்து, சுகாதார அமைச்சு விதித்துள்ள சுகாதார வழிகாட்டல்களை உரியமுறையில் கடைப்பிடிக்கும் வகையில், ஊழியர்களை வழிகாட்டுவதே இதன் பிரதான நோக்கமாகுமென, தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சுகாதார வழிமுறைகளை மீறும் தொழிற்சாலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனை கண்காணிக்க குழுவொன்றை அமைத்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துரையிடுக