காளி பூஜையில் கலந்து கொண்ட ஷகிப் அல் ஹாசனுக்கு எதிர்ப்பு!

 பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷாகிப் அல் ஹாசன். பங்களாதேஷ் மட்டும் அல்லாது இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளங்களை கொண்ட முதன்மையான பங்களாதேஷ் வீரர் இவராகத்தான் இருக்க முடியும்.

சூதாட்ட தரகர்கள் அணுகியதை ஐசிசியின் ஊழல் தடுப்பு பிரிவிடம் கூறாமல் இருந்ததால், ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட ஷகிப் அல் ஹாசனுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஷகிப் அல் ஹாசனுக்கு விதிக்கப்பட்ட தடை சமீபத்தில்தான் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், அண்மையில் காளி பூஜையை துவக்கிவைக்க ஷகிப் அல் ஹாசன் கொல்கத்தா சென்றதாக கூறப்படுகிறது.

மேலும், காளி சிலையின் முன்பு வழிபடுவது போன்ற புகைப்படங்களும் வெளியாகவே இஸ்லாமியர்கள் மனதை ஷகிப் புண்படுத்திவிட்டார் என்று சர்ச்சை ஏற்பட்டது.

இதற்கிடையே, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஷகிப், வீடியோ வெளியிட்டு விளக்கம் கொடுத்தார்.
அதில் மதத்தைச் சுற்றி பேச்சுக்களோ செயல்களோ இல்லாத சுமார் 40 முதல் 45 நிமிடங்கள் வரை மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேனே தவிர காளி பூஜையை துவக்க போகவில்லை.

எனினும், நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறவிருந்தபோது, காளி பூஜையில் மெழுகுவர்த்திகளை மட்டுமே ஏற்றி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன்.

எனது செயலுக்கு நான் வருத்தத்தையும் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.



0/Post a Comment/Comments