அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த, நடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்ய, ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கையொப்பத்துடனான கடிதம், நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவுக்கு அனுப்பி வைக்கப்ப்டுள்ளது.
அத்துடன் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே மற்றும் அரவிந்தகுமார் ஆகிய இருவருக்கும் நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியில் ஆசனங்களை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பிரதான படைகள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு எதிர்க்கட்சியில் இருந்து அரசமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஆளும் தரப்பில் ஆசன ஒதுக்கீட்டை மேற்கொள்ள தீர்மானிக்கட்டுள்ளது.
கருத்துரையிடுக