மனோவை திட்டிய விமல்!

 கொழும்பில் மோதரை இப்பாவத்த பகுதி மக்களின் கஸ்ட நிலை குறித்து பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனை ஆளும் கட்சி அமைச்சர் விமல் வீரவன்ச முட்டாள் என அநாகரீகமாகத் திட்டியுள்ளார்.

கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் நிவாரணம் கோரி வீதியில் ஆர்ப்பாட்டம் செய்வதாக மனோ கணேசன் பாராளுமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதன்போது பதில் அளித்த அமைச்சர் விமல் வீரவன்ச, 5000 ரூபா அந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஒரு வாரத்தில் செலவு செய்ய அல்ல எனவும் ஒரு மாதத்திற்கு செலவு செய்யவே 5000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்போது மனோ கணேசனுக்கும் விமல் வீரவன்சவிற்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டபோது, ‘வாயை மூடிக் கொண்டு உற்காரு முட்டாள்” என விமல் வீரவன்ச மனோ கணேசனை திட்டினார்.

கொழும்பில் பல பகுதிகளில் முடக்கநிலை தொடர்வதன் காரணமாக நிவாரண உதவிகள் வழங்குமாறு கோரி மோதரை, இப்பாவத்தை பகுதி மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதகாலமாகத் தொடரும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தினால் தமது வாழ்வாரம் முழுமையாக இழக்கப்பட்டுள்ளதால். அரசாங்கம் தமக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கோரியுள்ளனர்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 5,000 ரூபா நிவாரணம் தமது குடும்பத்தின் தேவைகளுக்குப் போதுமானதாக இல்லாமையால் தாம் பட்டினியை எதிர்நோக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அரசாங்கம் உடனடியாகத் தமக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிறு குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் தொடரும் ஊரடங்கினால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியிருப்பதாகவும் உரிய அதிகாரிகளின் கவனத்தில் கொள்ள வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.




0/Post a Comment/Comments