முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் ஒரு வருடத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
சிங்கராஜ வனத்தை 36 ஆயிரத்து 474 ஹெக்டேயராக அதிகரிப்பது தொடர்பாகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு ஒரு வருடத்திற்குப் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் திகதி எனத் திகதி குறிப்பிடப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய காலமாக சிங்கராஜ வனத்திற்கு அருகில் நடக்கும் சட்டவிரோத நிர்மாணிப்புகள் காரணமாக சுற்றுச் சூழல் அமைப்புகள் உட்பட பல தரப்பினர் இந்த வர்த்தமானி அறிவித்தல் இதுவரை வெளியிடப்படாமை குறித்து கடும் எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக