கல்வியமைச்சு வௌியிட்ட விஷேட அறிவிப்பு!

 அறிவிக்கப்பட்டுள்ள திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறுமென கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரரோ கூறியுள்ளார்.

அதன்படி எதிர்வரும் ஜனவரி 18 – 28ஆம் திகதி வரையில் பரீட்சைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான பாடவிதானங்கள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆய்வு செய்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்களிடமிருந்து இணையத்தளம் ஊடாகவும் வலயக் கல்வி அதிகாரிகளிடமிருந்தும் தகவல்களை பெற்றுக்கொள்ளவுள்ளதாக அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

குறித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடத்தும் திகதியில் மாற்றம் தேவையா என தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.



0/Post a Comment/Comments