இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பூசியை வெளியிட முடியும் என BioNTech எனப்படும் ஜேர்மனிய நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
BioNTech நிறுவனத்தின் இணை நிறுவுனர் Ugur Sahin இதனை கூறியுள்ளார்.
இதன்படி Pfizer நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் குறித்த தடுப்பூசியை அமெரிக்கா அல்லது ஐரோப்பாவில் இந்த வருட இறுதிக்குள் வெளியிட முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கான நடவடிக்கைகளை முழு வீச்சில் தமது நிறுவனம் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்த கொரோனா தடுப்பூசிக்கான அனுமதியை பெறும் நடவடிக்கைகள் இந்த வாரம் ஆரம்பிக்கப்படும் எனவும் BioNTech நிறுவனத்தின் இணை நிறுவுனர் Ugur Sahin தெரிவித்துள்ளார்.
இதன்படி குறித்த அனுமதி கிடைக்கும் பட்சத்தில் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் கொரோனா தடுப்பூசியை வழங்கும் வடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துரையிடுக