பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான விசேட அறிவிப்பு!

 நாட்டிலுள்ள பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.


தரம்-6 முதல் 13 வரையான வகுப்புகள், அன்றைய தினம் முதல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை தவிர்த்து ஏனைய பாடசாலைகளே அன்றையதினம் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை மூன்றாம் தவணை கற்றல் செயற்பாடுகளை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்க முன்னதாக தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் நேற்றைய தினம் பல முக்கிய கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதோடு, கற்றல் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பிலான தீர்மானம் இன்றையதினம் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி நாட்டிலுள்ள பாடசாலைகள் யாவும் 23ஆம் திகதி முதல் திறக்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

0/Post a Comment/Comments