நேற்றிரவு வௌியான அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல்!

 துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பணிகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரான கலாநிதி பி.பீ.ஜயசுந்தரவின் கையொப்பத்தில், விசேட வர்த்தமானி அறிவித்தல் ​நேற்றிரவு வெளியானது.

அந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், துறைமுக அதிகார சபையின் கீழுள்ள சகல சேவைகளும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுமக்கள் சேவைச் சட்டத்தின் 02 ஆம் பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பிரகாரம் இந்த வர்த்தமானி வெளியாகியுள்ளது.

இதன்படி, 1979 ஆம் ஆண்டின் 51 ஆம் இலக்க துறைமுக அதிகார சபைச் சட்டத்தின் 3 ஆம் உறுப்புரையினால் தாபிக்கப்பட்ட இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு சேவைகள், வேலைகள் மறறும் தொழில் பங்களிப்பு என்பன அத்தியாவசிய சேவையாக பிரகடணம் செய்யப்பட்டுள்ளன.



0/Post a Comment/Comments