பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் வர்த்தமானி அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்!

 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிஇ அதிகளவு பயணிகளுடன் கொழும்பில் இருந்து மத்துகம நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பஸ் வண்டியின் சாரதியும்இ நடத்துனரும் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பயணிகளை ஏற்றிச் செல்லும் நடைமுறையில் ஒக்டோபர் 15ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் னுஐபு அஜித் ரோஹன தெரிவித்தார்.

இதேவேளை புறக்கோட்டை பஸ் மற்றும் ரயில் நிலையங்களை மையப்படுத்தி விசேட பாதுகாப்புத் திட்டம் அமுலாவதாகவும் அவர் கூறினார்.

இதன் பிரகாரம்இ கொழும்பிற்கு வருகின்ற மற்றும் கொழும்பில் இருந்து வெளியேறுகின்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள்இ தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் பயணிகளை ஏற்றவோஇ இறக்கவோ கூடாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் னுஐபு அஜித் ரோஹன தெரிவித்தார். எந்தவொரு பயணியும் வெளிமாவட்டங்களில் இருந்து புறக்கோட்டைக்கு வந்துஇ அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதில் தடையில்லை என அவர் கூறினார்.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னரைப் போன்றுஇ மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கலாம். தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள ஊடக நிறுவனங்கள்இ துறைமுகம் மற்றும் மின்வலுத் துறையுடன் தொடர்புடைய அமைப்புக்கள் இயங்குவதில் தடையில்லை. இந்நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் ரயில் மூலம் கோட்டை ரயில் நிலையத்திற்கு வருவார்களாயின்இ அவர்களை அலுவலக வாகனங்கள் மூலம் அழைத்துச் செல்லுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்..



0/Post a Comment/Comments