முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பாதுகாப்பான முறையில் கௌரவமாக புதைப்பதற்கு ஏற்புடையவகையில் அரசாங்கம் தற்போதுள்ள கொள்கையை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தும் என ஐக்கிய நாடுகள் சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.
இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஹனா சிங்கர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தொற்று நோயால் இறந்தவர்கள் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுக்க, அந்த உடலங்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற பொதுவான அனுமானம் ஆதாரங்களால் நிரூபணமாகவில்லை.
அதற்கு பதிலாக, தகனம் என்பது அவரவர் கலாச்சார தேர்வுகளை அடிப்படையாக கொண்டவை.
புதைக்கும் விடயம் தொடர்பாக முஸ்லிம்களிடம் இருந்து தமக்கு தொடர்ச்சியான உணர்வுபூர்வமான கோரிக்கைகள் வந்துகொண்டிருப்பதாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்று நோயால் இறந்தவர்கள் தொடர்பில் தற்போதுள்ள நடைமுறையானது பாரபட்சமானதென அவர்கள் உணர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்கு அனுமதிக்காதவிடத்து அது நாட்டின் சமூக ஒத்திசைவிற்கு பங்கத்தை ஏற்படுத்தக்கூடும் என தாம் அஞ்சுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசேடமாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை கடுமையாக பாதிக்கக்கூடும்.
ஏனெனில் கொரோனா வைரஸ் அறிகுறிகள் அன்றேல் தொற்றாளருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பின் அவர்கள் மருத்துவப் பராமரிப்பை நாடுவதனை தவிர்ந்துகொள்ளும் சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துரையிடுக