இலங்கையின் தொடர்ச்சியான இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில், ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வர்த்தகம் என்பது ஒரே திசையை நோக்கி பயணிப்பது அல்லவென்றும் தற்போது விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாட்டால், இலங்கை மற்றும் ஐரோப்பாவின் வர்த்தக நடவடிக்கை மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீடுகளுக்கும் பாரிய அச்சுறுத்தல் ஏற்படுமென ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இந்த இறக்குமதி கட்டுபாடானது, இலங்கை பிராந்திய பொருளாதார மையமாக மாறுவதற்கு தடையாக இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஒன்றியம், தொடர்ச்சியாக விதிக்கப்படும் இறக்குமதி கட்டுப்பாடு உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ருமேனியா தூதரகங்கள் இணைந்து இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள், இலங்கை மற்றும் ஐரோப்பிய வணிகத்துறை மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீட்டில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மூலப்பொருள் மற்றும் இயந்திரங்களை இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்துவதன் மூலம் இலங்கையின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
கருத்துரையிடுக