தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பல வருடங்களுக்குப் பிறகு விசேடஅடைவு!

 நேற்றைய தினம் (15) வெளியான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 200 புள்ளிகளை ஆகக் குறைந்தது 5 மாணவர்கள் பெற்றுள்ளனர்.


பல வருடங்களுக்குப் பிறகு இந்த அடைவு எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2020 ஆம் ஒக்டோபர் 11ஆம் திகதி ,டம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் திணைக்களத்தின் www.doenets.lk  மற்றும் http://www.results.exams.gov.lk//home.htm ஆகிய ,ணையத்தளங்களில் வெளியிடப்பட்டன.

இதற்கமைய இம்முறை 20,000 மாணவர்கள் புலமைப்பரிசில்களை பெறுவதற்கு தகுதிபெற்றுள்ளனர்.



2020 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் மற்றும் மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளிகள் விபரங்கள்:

162 புள்ளிகள்

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி, மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல், கேகாலை.

160 புள்ளிகள்

யாழ்ப்பாணம் , கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பாந்தோட்டை.

159 புள்ளிகள்

திருகோணமலை, பதுளை, பொலனறுவை.

158 புள்ளிகள்

நுவரெலியா, மன்னார், இரத்தினபுரி, அநுராதபுரம்.

155புள்ளிகள்

புத்தளம், மொனராகலை.


0/Post a Comment/Comments