ரஷ்யாவில் கைது செய்யப்பட்ட 27 இலங்கையர்கள்!

 போலித் தகவல் வழங்கி ரஷ்யா சென்ற 27 இலங்கையர்கள் அந்நாட்டு பாதுகாப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் இந்த வருடம் ரஷ்ய நாட்டிற்கு சென்ற இலங்கையர்களாகும். 27 பேரில் 17 தற்போது சிறைத் தண்டனையை நிறைவு செய்துள்ளனர்.

அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மேலும் 10 பேர் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தடுத்து வைக்கப்பட்ட 10 பேருக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளமையினால் அவர்கள் பல்வேறு நகரங்களில் உள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தூதரக சுட்டிக்காட்டியுள்ளது.


அத்துடன் இலங்கையில் உள்ள போலி வெளிநாட்டு தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு எதிராக ரஷ்ய தூதரகத்திற்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன.

அவ்வாறான போலி நிறுவனங்களுக்கு ஏமாற வேண்டாம் என்ற ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


0/Post a Comment/Comments